திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு பலகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கையெழுத்திட்டார்.

திருச்சியில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.

செஸ் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு பலகையில் கலெக்டர் பிரதீப்குமார் முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரிசையாக கையெழுத்திட்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் கலைவாணி மற்றும் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!