சென்னை - திருச்சி அதிவேக விரைவு ரெயிலின் வண்டி எண், நேரம் மாற்றம்

சென்னை - திருச்சி அதிவேக விரைவு ரெயிலின் வண்டி எண், நேரம் மாற்றம்

பைல் படம்.

சென்னை - திருச்சி இடையே இயங்கும் அதிவேக விரைவு ரெயிலின் வண்டி எண், நேரம் மாற்றம் 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை இடையே (வண்டி எண்:16795/16796) அதிவேக விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 3-55 மணிக்கு திருச்சியை, வந்தடையும். இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி முதல் இந்த ரெயில் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம் மற்றும் வண்டி எண் ஆகியவை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி. சென்னை எழும்பூரில் (வண்டி எண்: 22675) காலை7-15 மணிக்கு புறப்படும் இந்த அதிவேக விரைவு ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடையும்.

அது போல மறுமார்க்கமான திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் (வண்டி எண்:22676) இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னை எழும்பூரை மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல் பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நடைமுறை வருகிற 8-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரெயில்வே தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story