பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
X

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இன்று பஸ் போக்குவரத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காக வந்தது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பள்ளி, கல்லூரிகளும், வர்த்தக நிறுவனங்களும் நிரம்பியுள்ளன.இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 873-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் 5,945 முறை வந்து செல்கின்றன.

இப்பேருந்து நிலையத்தை சீர்மிகு நகர திட்ட நிதியில், இப்பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடித்துள்ளனர்.

இதனை கடந்த 30- தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று காலை சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்தினை அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி சிறிது தூரம் பயணித்தனர். இதனை தொடர்ந்து சத்திரம் பஸ் நிலையம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.


சத்திரம் பஸ் நிலையம் 11 ஆயிரத்து 852 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 7 ஆயிரத்து 30 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டியுள்ளனர்.

ஒரே சமயத்தில் 15 பேருந்துக்கள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 54 தடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகியன இடம்பெற்றுள்ளன.

முதல் தளத்தில் உணவகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம் பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகியவையும் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!