தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மணப்பாறை டாக்டருக்கு பாராட்டு சான்றிதழ்

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மணப்பாறை டாக்டருக்கு பாராட்டு சான்றிதழ்
X

மணப்பாறை டாக்டர் கலையரசனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மணப்பாறை டாக்டருக்கு பாராட்டு சான்றிதழை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதி டாக்டர் பி.சி.ராய் பிறந்த நாள் விழா தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேசிய மருத்துவர் தினம் கொண்டாப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கடந்த கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மணப்பாறையை சேர்ந்த டாக்டர் பி. கலையரசனுக்கு பாராட்டு சான்றிதழை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!