திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு

திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு
X

மனநலம் குன்றிய பெண்ண மீட்ட போலீசாருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வெகுமதி வழங்கினார்.

மனநலம் குன்றியவரை மீட்ட திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெகுமதி அளித்தார்.

திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவுடன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் வழங்கிய அறிவுரையின்படி, 01.07.2021 மற்றும் 02.07.2021 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய சரக பகுதிகளிலும் சிறப்பு ரோந்து மேற்கொண்டு சாலை ஓரங்களில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த திருச்சியில் உள்ள 18 மனநலம் குன்றியவர்கள் மீட்கப்பட்டு அன்பாலயம் மனநல கருணை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 01.07.2021 அன்று திருவெறும்பூர் பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த சுமார் 47 வயது மதிக்கத்தக்க பெண் மீட்டு திருச்சி அன்பாலயத்தில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 6 மாத சிகிச்சைக்கு பிறகு மேற்படி நபரின் பெயர் விஜயா என்பதும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆந்திராவில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் மேற்படி நபரின் மகன் மற்றும் மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டு விஜயாவை அவரின் மகன் மற்றும் மகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த செயலை பாராட்டி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் யசோதா, இளஞ்சிறார் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், மற்றும் காவலர் நிவேதா ஆகியோர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு