திருச்சியில் பெண்ணிடம் நவீன செல்போன் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் பெண்ணிடம் நவீன செல்போன் பறித்த வாலிபர் கைது
X
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் (பைல் படம்)
திருச்சியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் நவீன செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சஞ்சய் என்பவரது மகள் பாயல் தின்குரா (வயது 22). பட்டதாரியான இவர் கடந்த 5-ஆம் தேதி மாலை தோழி தாரணி பிரியாவுடன் மொபட்டில் சென்றார். பாரதிதாசன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிய பின் வெளியே வந்து நவீன வசதி கொண்ட செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் பாயல் தின்குராவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் செல்போனை பறித்து சென்ற அரியமங்கலத்தை சேர்ந்த ஷேக்தாவூத் (வயது 32) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்