திருச்சியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது
X
திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையை சேர்ந்த ஷேக்மாகின் பாட்ஷா (வயது 22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சை விலார் ரோடு பகுதியை சேர்ந்த முத்துமணிகண்டன் (வயது 25), அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன் (23) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ஷேக்மாகின் பாட்ஷாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணிகண்டன், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!