மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் தன்னம்பிக்கை தினம் கொண்டாட்டம்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் தன்னம்பிக்கை தினம் கொண்டாட்டம்
X
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் தன்னம்பிக்கை தினம் கொண்டாடப்பட்டது.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சியில் தன்னம்பிக்கை தினம் கொண்டாடப்பட்டது.

மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர், 1970 களில் துவங்கி தமிழக இளைஞர்களை தன் காந்த எழுத்துக்கள் மூலம் தன்னம்பிக்கை வளர்த்த சிறப்பான சிந்தனையாளர், பேராசிரியர், தொழிலதிபர், எழுத்தாளர், இயக்கத்தின் தலைவர் என்ற பரிமாணங்களைக் கொண்ட டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் பிறந்தநாள் இன்று (08.04.22) மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாளாக கொண்டாடப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த தன்னம்பிக்கை நாளை முன்னிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் புத்தகங்களை வழங்கியும், பள்ளியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் பள்ளியின் வளர்ச்சி செய்ய பாடுபடும் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கியும், பள்ளிக்கு மூலிகை செடிகள் வழங்கப்பட்டது.

மக்கள் சக்தி இயக்கத்தின் தன்னம்பிக்கை நாளின் கொண்டாட்டத்திற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் விஜயகுமார், ஆர்.கே.ராஜா , எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா பாலாஜி, மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள், திருச்சி பிரிமியம் லயன்ஸ் கிளப் கதிரேசன், சிதம்பரம் , மனோகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

Tags

Next Story
ai as the future