திருச்சி காவிரி பாலத்தில் திடீர் விரிசல்- அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சி காவிரி பாலத்தில் திடீர் விரிசல்- அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
X

திருச்சி காவிரி பாலத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி காவிரி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதை அமைச்சர் கே .என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி காவிரி பாலம் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இந்த பாலத்தில் அவ்வப்போது பழுதுகள் சரிசெய்யப்பட்டு கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அவ் வழியே சென்று வரும் நிலையில் திடீர் திடீரென விரிசல்களும், பாலத்தின் நடுவில் பள்ளங்களும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழுதடைந்த காவிரி பாலத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக அங்கு ஏற்பட்டு உள்ள விரிசலை சீர் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai