திருச்சியில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அயிலை சிவசூரியன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார்.
டெல்டா மாவட்டங்களில் காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியை பாதுகாப்பதற்கும் சம்பா சாகுபடி தொடங்குவதற்கும் சட்ட ரீதியான தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு காவிரி பிரச்சனைக்காக தமிழகத்துக்கான காவிரி நீர் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி தொடர் முழக்க தர்ணா போராட்டம் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நடத்துவது எனமுடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடத்துவதென ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்ணா போராட்டத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் நடராஜன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் தமிழாதன்,மேற்கு தொகுதி செயலாளர் புல்லட் லாரன்ஸ், திருவரம்பூர் தொகுதி செயலாளர் ஆற்றல் அரசு, முசிறி தொகுதி செயலாளர் கலைசெல்வன், சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர்ரவிக்குமார் , அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக செழியன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu