திருச்சியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருச்சியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
X

திருச்சி நகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகிறது.

திருச்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வுிதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு, கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ சுற்றித்திரியும் கால்நடைகளை (மாடுகளை) மாநகராட்சி மூலம் பிடித்து செல்வதோடு முதன் முறையாக ரூ.10,000/- அபராதத்தினை மூன்று நாட்களுக்குள் செலுத்தி சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு உரிமையாளர் பெற்றுக் கொள்ளவில்லை எனில், மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அந்த தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி