நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற 3 பேர் மீது வழக்கு
நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து செல்லும் காட்சி
திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் சில இளைஞர்கள் ஒரு தெருநாயை கல்லால் அடித்துக் கொன்று நாயின் கால்களை பிடித்து ஆட்டோவில் அமர்ந்தபடி தெருவில் தர, தரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த திருச்சி உறையூர் சாலைரோடு பகுதியை சேர்ந்த புளூகிராஸ் அமைப்பின் துணைத்தலைவர் ராகவன் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில், பாலக்கரை போலீசார் அந்த ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு அதில் சென்றவர்கள் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த வீரமணி மற்றும் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் நாயை கொன்று ஆட்டோவில் அமர்ந்தபடி சாலையில் இழுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரமணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தெருநாய் கடித்து விட்டதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக அவரை 40 நாட்கள் கண்காணித்து, பின்னர் கைது செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu