திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி கண்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, விபச்சார தடுப்புப் பிரிவு, அனைத்து மகளிர், தெற்கு விபத்து குற்றபுலனாய்வு ஆகிய காவல் நிலையங்களில் இன்று காலை திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரோல்கால் அட்டவணை படி காவலர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? ஆயுத அறையில் துப்பாக்கிகள் எத்தனை உள்ளன? அவை சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றசரித்திர ரவுடிகள் பட்டியல் அவர்கள் சிறையில் உள்ளனரா? வெளியில் நடமாடுகிறார்களா? என்பது பற்றியும் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது திருச்சி மாநகர துணை ஆணையர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
திருச்சி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆடு திருடர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி நகரின் மதர் ஸ்டேஷன் என அழைக்கப்படும் மிக பழமையான கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu