திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டத்தில்  கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு
X
திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மீன்மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக திருச்சி பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த சுதாகரை (வயது 42) காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீரங்கம் அருகே மூலத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 36) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாரை (30) ராம்ஜிநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!