திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை  பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
X
திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகுமாரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூந்தோட்டம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற சக்திவேல், பசுபதி, அஜித் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai marketing future