திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
X
திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சின்ன கடை வீதி, ஆண்டாள் தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்ன கடை வீதி, ஆண்டாள் வீதி சந்திப்பு பகுதியில் ஒரு கார் நின்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாளன் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த காரில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து காரையும், அதில் இருந்த இரண்டே கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, காரில் இருந்த திருச்சி மாவட்டம் துவாக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (வயது 38), கீழ ஆண்டார் வீதி, இச்சிமரசந்தை சேர்ந்த உதயகுமார் (வயது 29), கீழ தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (வயது 28) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.22 ஆயிரத்து 500 இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!