திருச்சியில் கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் கஞ்சா வியாபாரி மீது மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருச்சி மாநகரம், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மதுரைரோடு ஜீவா நகர் பின்புறம் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கஞ்சாவிற்பனை செய்து கொண்டிருந்த ராஜ்குமார் என்கிற வீரப்பன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கின் குற்றவாளியான ராஜ்குமார் (எ) வீரப்பன் என்பவருக்கு திருச்சி மாநகரில்உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் 7குற்ற வழக்குகள் நிலுவையில்உள்ள நிலையில் கஞ்சா வியாபாரிவீரப்பனை குண்டர் சட்டத்தில்கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ்கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்காக ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!