மணிப்பூர் கலவரம் கண்டித்து திருச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம் கண்டித்து திருச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டு தவறிய பா.ஜ.க. ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் இன்று புதன்கிழமை திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சமாதானம் ஒருமைப்பாட்டு கழகத்தின் மாவட்ட செயலாளர் ஆர். மணிமோகன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில துணைத்தலைவர் எம். செல்வராஜ் பேசினார். அப்போது அவர் இயற்கை எழில் சூழ்ந்த வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறிவிட்டன. இரண்டு மாதத்திற்கு மேலாக கலவரம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதில் இதுவரை 42 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில அரசின் அறிக்கை கூறுகிறது. பலர் காணாமல் போய் உள்ளனர். வீடுகளை இழந்து 65 ஆயிரம் பேர் அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் முடங்கி வீடுகளிலும், முகாம்களிலும் முடங்கி உள்ளனர் என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். சிவா, திருச்சி தமிழறிஞர் திருக்குறள் முருகானந்தம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராமராஜ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளர் க.இப்ராகிம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆநிரை செல்வன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu