வேட்பாளர் ஆறுமுகத்திற்கு லோக் தந்திரிக் ஜனதாதளம் நிர்வாகிகள் வாழ்த்து

வேட்பாளர் ஆறுமுகத்திற்கு லோக் தந்திரிக் ஜனதாதளம் நிர்வாகிகள் வாழ்த்து
X

திருச்சி மாநகராட்சி 20வது வார்டு வேட்பாளர் ஆறுமுகத்திற்கு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி மாநில நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

திருச்சி 20வது வார்டு வேட்பாளர் ஆறுமுகத்திற்கு லோக் தந்திரிக் ஜனதாதளம் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிடும் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் இன்று மாலை தனது பிரச்சாரத்தை வார்டுக்குட்பட்ட வளையல் கார தெருவில் நிறைவு செய்தார்.

அப்போது ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை சோர்வடையாமல் பிரச்சாரம் செய்து வெற்றி முனைப்பில் உள்ள வேட்பாளர் ஆறுமுகத்திற்கு லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் மாநில செயலாளர்கள் தொட்டியம் ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் கார்த்திக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருச்சி மாவட்ட செயலாளர் அறிவழகன் உடன் இருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!