திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து: மக்கள் நீதி மய்யம் கேள்வி

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து: மக்கள் நீதி மய்யம் கேள்வி
X

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி (கோப்பு படம்).

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு யார் காரணம் என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்தானதற்கு யார் பொறுப்பேற்பது? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்பட 3 மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாய் தமிழகத்தில் நீட் தேர்வு துவங்கி ரிசல்ட்டுக்காக பல்லாயிரகணக்கான மாணவர்கள் காத்திருக்கும் இந்த வேளையில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம், தர்மபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ கவுன்சிலின் இளநிலை மருத்துவப் பிரிவு ரத்து செய்துள்ளது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது. மேலும் மேற்படி மூன்று மருத்துவ கல்லூரிகளில் உள்ள 500-இடங்கள் இன்று கேள்வி குறியாகியுள்ளது.

மேலும் மேற்படி மூன்று மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உறுதிபடுத்தும் பயோமெட்ரிக் முறையை பின்பற்றாதது மற்றும் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா பொறுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவே மேற்படி மூன்று கல்லூரிகளின் அங்கிகாரம் ரத்து செய்திருப்பதாக தேசிய மருத்துவ கமிஷன் தெரிவிக்கிறது.

அப்படியானால் தமிழகத்தில் மொத்தமுள்ள 36-மருத்துவ கல்லூரிகள் மற்றும் 2-பல் மருத்துவகல்லூரிகளில் இந்த மூன்று கல்லூரிகளை தவிர ஏனைய கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் பயோமெட்ரிக் முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவே அர்த்தம்.

எனவே இந்த விவகாரத்தில் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் பொறுப்புமிக்க மருத்துவ கல்லூரி முதல்வராக செயல்பட வேண்டியவர்கள், தங்களது பொறுப்பை மறந்து செயல்பட்டதன் விளைவு இன்று தாய் தமிழகம் 500-மருத்துவ கல்லூரி இடங்களை இழந்துள்ளதுடன் மிகபெரிய அவபெயரை பெற்றுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதே வேளையில் தங்களது கடமையை உணராது பொறுப்பற்ற வகையில் செயல்பட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இதர கல்லூரி முதல்வர்கள் மீது தமிழக முதல்வர் மற்றும் துறை செயலர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business