நிலமற்ற அனைவருக்கும் வீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு
எச்.எம்.கே.பி. மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY), அனைத்து இந்திய குடிமக்களுக்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற என இருவேறு பிரிவுகளை கொண்ட இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடு கட்டித்தரவும், ஏற்கனவே உள்ள வீடுகளை மேம்படுத்தவும் அரசு மானியங்களை வழங்குகிறது.
திட்டத்தின் நன்மைகள்
மலிவு விலை வீட்டுவசதி: PMAY திட்டத்தின் முதன்மை நோக்கம் குறைந்த வருமானம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீட்டு வசதியை உறுதி செய்வதாகும். இத்திட்டத்தின் கீழ் அவர்களது கனவு இல்லத்தை நிஜமாக்கிக் கொள்ளலாம்.
வட்டி மானியம்: தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதனால் கடன் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சுமை கணிசமாக குறைகிறது.
தரமான கட்டுமானம்: PMAY திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தரநிலைகளை பின்பற்றி வீடுகள் கட்டப்படுவதால் பயனாளிகள் தரமான வீடுகளைப் பெறுகிறார்கள்.
பெண்களுக்கு முன்னுரிமை: இத்திட்டத்தில் வீட்டின் உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ பெண்களை நியமிக்க ஊக்குவிக்கப்படுகிறது. இது பெண்கள் அதிகாரம் பெற வழிவகுக்கிறது.
பயனடைந்தோரின் எண்ணிக்கை
இதுவரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் மூலம் பயனடைந்துள்ளன. இதன் மூலம் பலரது சொந்த வீடு என்ற கனவு நனவாகியுள்ளது.
திட்டத்தின் தொடக்கம்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் ஜூன் 25, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, இந்திய அரசின், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய சிறப்பான பங்காற்றுகிறது. இத்திட்டம் மூலம் சமூகத்தின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளை மேம்படுத்த முனைகிறது. இதன் தொடர்ச்சியான செயல்பாட்டின் மூலம் இன்னும் பல குடும்பங்களின் வீட்டுக்கனவு நிறைவேறும்.
பிரதமருக்கு கடிதம்
ஆனால் தமிழகத்தில் இந்த திட்டம் சரியாக நிறைவேற்றப்படவில்லை. இன்னும் லட்சக்கணக்கானவர்கள் நிலமே இல்லாததால் வீடு கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு முதலில் நிலம் வழங்கி பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசே வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி (இந்திய மஸ்தூர் விவசாய தொழிலாளர் சங்கம்) என்ற அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
அதில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக அதிகம் வேறு பயன் அடைந்துள்ளனர் அடித்தட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை எனும் திட்டத்தை முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் சீராக செயல்படுத்தி இருந்தால் 40% நகர்ப்புற ஏழைகள் பயன் அடைந்து இருப்பார்கள் ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ஆகவே சென்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலம் இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்க மோடி வில்லேஜ் என்கிற பெயரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை மாற்றம் செய்து செயல்படுத்த எச்.எம். கே.பி சார்பில் கடிதம் எழுதி இருந்தோம் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி கருதி போர்க்கால அடிப்படையில் ஏழை எளிய நிலம் இல்லாத மக்களும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயன் அடைய வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
27ம் தேதி ஆர்ப்பாட்டம்
இந்த திட்டத்தை அமல்படுத்தக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வருகிற 27ந்தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை எச்எம்கேபி அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலம் இல்லாத ஏழைகள் மற்றும் வீடற்ற ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பங்கேற்று அரசிற்கு நமது உணர்வுகளை வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என ராபர்ட் கிறிஸ்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu