திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி பெரியகடைவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் பெரிய கடைவீதி பகுதியிலுள்ள சங்கீத் வீடியோ கேபிள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது முதலாளிக்கும் மற்றொரு கேபிள் நெட்வொர்க் முதலாளிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கணேசன் சம்பவத்தன்று தெற்கு சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே கேபிள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கணேசனை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் அவரது வலது கையில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கணேசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!