தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கல்லணைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கல்லணைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்
X
திருச்சி உத்தமர்சீலி அருகே காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
Flooded Roads - திருச்சி உத்தமர் சீலி அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கல்லணைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Flooded Roads -மேட்டூர் அணைியில் இருந்து காவிரி ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் கடல் போல் காட்சியளிக்கிறது. இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுக் கொண்டு செல்வதால் கரையில் உள்ள கிராமங்களுக்கு முன் அறிவிப்பு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து உத்தமர் சீலி வழியாக கல்லணைக்குச் செல்லும் பாதையில் ஒரு தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப்பாலும் காவேரி மற்றும் கொள்ளிடத்திற்கு சமமாக இருப்பதால் காவிரியில் உள்ள தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்து தரைப் பாலத்தை கடந்து அருகில் உள்ள கொள்ளிடத்தில் கலக்கிறது. இதனால் அந்த தரைப்பாலம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அளவிற்கு அதிகமாக வருவதால் சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் ஆபத்து அறியாமல் சிலர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்கிறார்கள். இதனால் உத்தமர் சீலியில் இருந்து கல்லணைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story