திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
X

ஆசிரியை மீது மோதிய தனியார் கல்லூரி பேருந்து.

திருச்சியில் பள்ளி ஆசிரியர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 49). திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே எதிர்பாராத விதமாக அவர் மீது தனியார் கல்லூரி பஸ் மோதி உள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி ஆசிரியை உயிரிழந்ததை தொடர்ந்து செயிண்ட் ஜேம்ஸ் பள்ளிக்கு இன்று அரைநாள் விடுமுறை விடப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai business to start