திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை அமல்படுத்தவேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜான் பாஷா தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் சிறப்புரையாற்றினார்.

இதில் தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் முபாரக்அலி மற்றும் ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!