திருச்சி கல்லூரியில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஜமால் முகமது கல்லூரியில் பிங்க் அக்டோபர் மாதத்தை முன்னிட்டு , மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் மாணவர்கள் உடல்நலம் பராமரிப்பு மையம் , உதவும் இதயங்கள் மற்றும் ஜி.வி.என். மருத்துவமனை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

கல்லூரியின் உதவும் இதயங்களின் ஆலோசகர் டாக்டர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தலைமை விருந்தினர் ஜி. வி. என். மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சுசித்ரா சிறப்புரையாற்றினார் .புற்றுநோய் உண்டாவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கினார்.

பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேக் இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். நன்றி உரையை உதவும் இதயங்களின் ஆலோசகரான நஃபியுன் நிஷா வழங்கி அந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!