திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது
X

திருச்சி கோட்ை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி இ.பி.ரோடு கமலா நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் அங்குள்ள முருகன் தியேட்டர் அருகாமையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்கிற சுபாஷ் சந்திரபோஸ் ( வயது 21) அவரை கத்திமுனையில் மிரட்டி ரூ.500 பறித்துச் சென்றுள்ளார்.

இது குறித்து ராம்குமார் கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷ் சந்திரபோசை கைது செய்தனர் .

ரவுடி பட்டியலில் இருக்கும் அவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் அவரிடமிருந்து ஒரு கத்தி கைப்பற்றப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்