திருச்சி மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீர் சாலைமறியல்

திருச்சி மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல இன்று மலைக்கோட்டை பகுதியில் உள்ள 15-வது வார்டுக்கு உட்பட்ட பூசாரி தெருவில் பா.ஜ.க.வினர் வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் வருவதற்கு மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறினர்.
இதையடுத்து இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையையும், சாக்கடையை சுத்தம் செய்யாததை கண்டித்து சிந்தாமணி பகுதியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி அருகே பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) பாரதிதாசன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் வரவழைக்க கோரி கோஷமிட்டு சாலை ஓரத்தில் பொதுமக்கள் நின்றனர்.
பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ் நேரில் வந்து மேற்கண்ட பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu