திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். 

கோவை பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து திருச்சியில் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், கோவை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் பாஜக மகளிர் அணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில செயலாளர் லீலா சிவக்குமார், துணைத்தலைவி உமா, பொதுச்செயலாளர் துர்கா தேவி, பொருளாளர் மலர்கொடி, மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai healthcare products