தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்
X

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோடும் தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா அஞ்சான், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநில வர்த்தக அணி செயலாளர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜய்யன், கௌதம் நாகராஜன், பார்வதி நடராஜன் உள்பட ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

Tags

Next Story