திருச்சியில் பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருச்சியில் பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மேலரண் சாலையில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக உழவர் தினத்தை முன்னிட்டு திருச்சி நந்தி கோவில் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகே (மாட்டுப் பொங்கல்) பொங்கல் வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை மண்டல் தலைவர் மகேந்திரன், செயலாளர் சீனிவாசன், பாலக்கரை மண்டல் தலைவர் மல்லி செல்வம், மாவட்ட செயலாளர் சங்கீதா பிரகாஷ் மாவட்ட துணை துணைத்தலைவர் சீனி, ராஜா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!