திருச்சி அரசு மருத்துவமனையில் பா.ஜ.க. மருத்துவ குழு திடீர் ஆய்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் பா.ஜ.க. மருத்துவ குழு திடீர் ஆய்வு
X

திருச்சி அரசு மருத்துவமனை ஆக்சிஜன் பிரிவில் பாஜக மருத்துவ குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனை ஆக்சிஜன் பிரிவில் பா.ஜ.க. மருத்துவ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி அண்ணல் காந்தி மருத்துவமனையில் பாரத பிரதமரின் ஆக்ஸிஜன் பிராணவாயு உற்பத்தி நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆக்ஸிஜன் உற்பத்தி அளவு சரிவர செயல்படுவில்லை என பா.ஜ.க திருச்சி மருத்துவ தன்னார்வ குழு பொறுப்பாளர்களான பா.ஜ.க திருச்சி நகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஆர். புவனேஸ்வரி திருச்சி மாநகர் மாவட்ட துணை தலைவர் சி. இந்திரன் ஆகியோருக்கு அரசு மருத்துவமனை டீன் வனிதா தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று உடனடியாக பா.ஜ.க. மருத்துவ குழுவினர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சிவக்குமார், டாக்டர் இளங்கோ அரசு மருத்துவமனை குழுவினரும் சம்பந்தப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சர்வீஸ் மேனேஜர் சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்து உடனடியாக ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை செயல்பட ஆவண செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பொன்மலை மண்டல் தலைவர் ஆர்.இளங்கோவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். ஒமிக்ரான் என்ற கொடிய நோய் வேகமாக பொதுமக்களுக்கு பரவி வரும் நிலையில் பா.ஜ.க மருத்துவ குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings