பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே.அண்ணாமலையின் அறி வுறுத்தலின் படி, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் வழிகாட்டுதல்படி. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், கோட்ட அமைப்பு செயலாளர் கே.பாலன் மற்றும் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன் ஆகியோரின் ஆலோசனையின்படி திருச்சி மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதன் படி, மாவட்ட பொது செயலாளர்களாக கே. ஒண்டிமுத்து, எம். காளீஸ்வரன், பொன்.தண்ட பாணி ஆகியோரும், மாவட்ட துணை தலைவர்களாக மணிமொழி தங்கராஜ், ஆர்.சந்துரு, சி.இந்திரன், பி.ஆர்.ராஜா, ஏ.என்.எம்.அழகேசன், பி. ஆதீஸ்வரி, ஜி.பாலமுருகன், கே.ஜெயகர்ணா ஆகியோரும், செயலாளர்களாக எம். ராஜேந்திரன், பி.செந்தில்குமார், பி.நாகேந்திரன், வி.சி.ஸ்ரீசாய் பிரசன்னா. ஓ.யசோதன், ரேகா கார்த்திகேயன், பி. சங்கீதா, வி. வேளாங்கண்ணி ஆகியோரும். பொருளாளராக கே. செல்வதுரை மற்றும் பிரசார பிரிவு மாவட்ட தலைவராக ஆர்.கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊரகநகர்புற வளர்ச்சி பிரிவு மாநில செயலாளராக பெருமாள் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu