திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது

திருச்சி பிராட்டியூரில்  பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி கைது
X
திருச்சி பிராட்டியூரில் பெண்ணை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 62). அதேபகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). அதே பகுதியில் பா.ஜ.க. மண்டல் தலைவராக உள்ளார். இருவரும் ஒரே தெருவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெயக்கொடி ஆடு, பரமசிவத்தின் வீட்டு அருகே சென்று உள்ளது. இதற்கு ஏன் இங்கு ஆடு வருகிறது என்று பரமசிவம் ஜெயக்கொடியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் பரமசிவம் ஜெயக்கொடியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயக்கொடி திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். தாக்கப்பட்ட ஜெயக்கொடி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!