திருச்சி தொகுதியை கைவிட்ட பா.ஜ.க: அ.ம.மு.க.விற்கு ஒதுக்கி அறிவிப்பு

திருச்சி தொகுதியை  கைவிட்ட பா.ஜ.க: அ.ம.மு.க.விற்கு ஒதுக்கி அறிவிப்பு
X

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட தொகுதி ஒதுக்கீடு பட்டியல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கைவிட்ட பா.ஜ.க அ.ம.மு.க.விற்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கைவிட்ட பாரதிய ஜனதா கட்சி இத்தொகுதியை தனது கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது/

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது முதல் கட்ட தேர்தல் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார பிரச்சாரத்தை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருச்சி சிறுகனூரில் நாளை தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இரண்டு நாள் கழித்து அதாவது மார்ச் 24ஆம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திருச்சி நவலூர் குட்டப்பட்டு அருகே வண்ணாங்கோவில் என்ற இடத்தில் தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இப்படி இந்த இரு கட்சிகளும் பிரச்சாரம் அளவுக்கு வந்துவிட்ட நிலையில் மத்தியில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இப்பொழுதுதான் கூட்டணியை இறுதி செய்து தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

அந்த வகையில் பாஜக வெளியிட்ட முதல் பட்டியலில் 9 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக மட்டும் 20 தொகுதிகளில் களம் காண உள்ளது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேனி நாடாளுமன்ற தொகுதியும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை பாரதிய ஜனதா போட்டியிட தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது .

ஆனால் இங்கு சரியான வேட்பாளர் பாரதிய ஜனதாவிற்கு இல்லாததால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் அல்லது திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அல்லது முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. திருச்சியை பாரதிய ஜனதா கட்சி கைவிட்டது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil