கோட்டை பகுதியில் வங்கி முன்பு நிறுத்திய மோட்டார்சைக்கிள் மாயம்

கோட்டை பகுதியில் வங்கி முன்பு நிறுத்திய மோட்டார்சைக்கிள் மாயம்
X
திருச்சி கோட்டை பகுதியில் வங்கி முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள அரபிக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 74). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய கடைவீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் அந்த வங்கி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வாக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!