திருச்சி மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு இருவண்ண குப்பை தொட்டி

திருச்சி மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு இருவண்ண குப்பை தொட்டி
X

திருச்சி மாநகராட்சி பகுதி மக்களுக்கு இருவண்ண குப்பை தொட்டிகளை மேயர் அன்பழகன் வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு இருவண்ண குப்பை தொட்டிகளை மேயர் அன்பழகன் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1க்குட்பட்ட 4வது வார்டு பொது மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவதற்காக திருவரங்கத்தில் 4900 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை தொட்டிகளை மேயர் அன்பழகன் இன்று வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம் - 1க்குட்பட்ட 4 -வது வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4900 வீடுகளுக்கு ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார், ஏற்பாட்டில் இரு வண்ண குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடந்தது . மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இரு வண்ண குப்பைத் தொட்டிகளை வழங்கினர். மேலும்,4900 வீடுகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வார்டுகளில் இந்த இருவண்ண தொட்டிகள் வழங்கப்பட்டால் பொது மக்கள் குப்பைகளை பிரித்து வழங்க ஏதுவாக இருக்கும். இதன் மூலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story