பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் பி.எம்.எஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இ.பி.எஸ். –1995 ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய, தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வருகின்ற மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி , ஐ.எம்.டி.எஸ். சங்கம் சார்பில், நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலகங்கள் ( EPFO ) முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ராஜா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இ.பி.எப்.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மேலும், இ.பி.எப்.ஓ. மண்டல கமிஷனர் மூலம் மத்திய நிதி அமைச்சருக்கு மகஜர் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தணிகை அரசு முன்னிலை வகித்தார். பெல் மஸ்துர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story