திருச்சியில் மாவீரன் பகத் சிங் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் மாவீரன் பகத் சிங் பிறந்த நாள்  விழா கொண்டாட்டம்
X

திருச்சியில் பகத்சிங் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சியில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் விழாவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொண்டாடினர்.

இன்று, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட மாவீரன் பகத்சிங்கின் 114 வது பிறந்த நாளாகும். இதனையொட்டி இளைஞர் பெருமன்றம் சார்பில் திருச்சி மாநகர் எடமலைபட்டிபுதூரில் பகத்சிங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.விழாவில் பங்கேற்றவர்களுக்கு மா, பலா, நெல்லி. மாதுளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டமரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு இளைஞர் பெருமன்ற தலைவர்.முருகேசன் தலைமை வகித்தார். இந்திய. கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ். சிவா. தி.மு.க. சார்பில் மாவட்ட துணைசெயலாளர் தி.முத்து செல்வம். வட்ட செயலாளர் சுருளிராஜ். சரவணன். விடுதலை சிறுத்தை சார்பில் ஜெய்கணேஷ். இந்திய.கம்யூ. பகுதி குழு செயலாளர் A.G. பிரான்சிஸ்.மாணவர் பெருமன்றம் Kஇப்ராஹீம் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!