திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி

திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
X

திருச்சி மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.

திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று (26.06.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோhpக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 416 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

இக் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.105000- மதிப்பிலான மின்கலனால் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியும் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.185900- மதிப்பிலான செயற்கை அவயமும் 1 பயனாளிக்கு ரூ.26800மதிப்பிலான செயற்கை அவயமும் ஆக மொத்தம் 4 மாற்றுத்திறனாளிக்கு ரூ.422700-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதிவுதவியாக 10 பயனாளிகளுக்கு ரூ. 20,000வீதம் 2,00,000க்கான தேசிய சேமிப்பு பத்திரத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி ஒவ்வொரு வார திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மனநல மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு செயலாளரின் அறிவுரைப்படி காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு உதவிடும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உடன் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்.அம்பிகாபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story