திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா விற்ற இருவர் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா விற்ற இருவர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா விற்ற இரண்டு பேரை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் மதுரை ரோடு, ஜீவா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த இரண்டு கடைகளில் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மூன்றரை கிலோ பான் மசாலா மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடையில் இருந்த சங்கிலியாண்டபுரம் ஸ்டெல்லா மேரிஸ் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 47), ஜீவா நகரைச் சேர்ந்த பாண்டியன் (வயது 42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த பான்மசாலா, புகயிலை பொருட்கள் மற்றும் 3 செல்போன்கள், பணம் ரூ.1,700-ஐ பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!