திருச்சியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

திருச்சி ஸ்டேட் வங்கி அலுவலக வளாகத்தில் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் 2-வது நாளாக வேலை நிறுத்தம் செய்த வங்கி ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள நிலையில் நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தனியார்மய கொள்கைளை கைவிடக்கோரியும் இந்தியா முழுவதும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின்படி வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இன்று 2-வது நாளாக வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வங்கிகளில் அந்தந்த வங்கி ஊழியர்கள் என சுமார் 3000 வங்கி ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் செய்த வங்கி ஊழியர்கள் இன்று காலை திருச்சி பாரத ஸ்டேட் வங்கி மெயின் கிளை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!