கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 21,863 பேருக்கு வங்கி பற்று அட்டை

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 21,863 பேருக்கு வங்கி பற்று அட்டை
X

திருச்சியில் நடந்த விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் நேரு வழங்கினார்.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 21,863 பேருக்கு வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் நேரு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (10.11.2023) நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்குவங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாநிகழ்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்குவங்கி பற்று அட்டைகளை வழங்கி உரையாற்றினார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த வாக்குறுதிபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும் இத்திட்டத்தில்விடுபட்ட பயனாளிகள் மேல்முறையீடு செய்துஆய்வின் பேரில் தேர்வு செய்யப்பட்டு,அப்பயனாளிகளுக்கு இன்று(10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் உரிமை வங்கி பற்று அட்டைகளைவழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (10.11.2023) நடைபெற்ற விழா நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் 21,863நபர்களுக்குவங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைசிறப்பாக செயல்படுத்தியஅரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சரண்யா, மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம்,திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !