மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது

மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது
X
மோசமான வானிலை காரணமாக சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் தரை இறக்கப்பட்டது.

இன்று மதியம் 1.58 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற இண்டிகோ விமானம் தூத்துக்குடியில் பெய்த கன மழை காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்படாமல் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த சபாநாயகர் அப்பாவு தூத்துக்குடிக்கு பயணித்தார்.

வானிலை சீரடைந்த பிறகு விமானம் மீண்டும் தூத்துக்குடிக்கு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர்.

வானிலை சீரான பின்னர் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் மீண்டும் திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அந்த விமானம் புறப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!