சிலம்பம் கம்பு, சுருள் வாளுடன் திருச்சியில் நடைபெற்ற ஆயுதபூஜை விழா

சிலம்பம் கம்பு, சுருள் வாளுடன் திருச்சியில் நடைபெற்ற ஆயுதபூஜை விழா
X

திருச்சியில் சிலம்ப கம்பு, சுருள் வாளுடன் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

சிலம்பம் கம்பு, சுருள் வாளுடன் திருச்சியில் ஆயுதபூஜை விழா நடைபெற்றது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கீழரண் சாலையில் உள்ள நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் 25வது ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நண்பர்கள் சிலபக்கூடத்தின் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், இணைச் செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகி எஸ்.ஆர். ஆறுமுகம் தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் தலைவர் ஆசான் சண்முகசுந்தரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகள் பயிற்சி பெரும் பொருட்களான சிலம்பம் கம்பு, வாள், கேடயம், மான் கொம்பு, ஈட்டி, சுருள் வாள், அரிவாள், பிச்சுவாள், லேசம், சக்கரப்போத்து, நட்சத்திர போத்து, செடி குச்சி, சக்கை, கர்லாக்கட்டை உள்ளிட்ட பொருட்களுக்கு மரியாதை செய்தனர்.


அதனை தொடர்ந்து சிலம்ப மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் கொய்யா, நெல்லி,எழுமிச்சை உள்ளிட்ட பழவகையிலான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் செயலாளர் யுவராஜ் பயிற்சியாளர்கள் சந்தோஷ்குமார், சேஷாத்ரி, காயத்ரி, வைஷ்ணவி மற்றும் திரளான சிலம்ப மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story