திருச்சியில் 'மாற்றம்' அமைப்பு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

திருச்சியில் நடந்த கருத்தரங்கில் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ. தாமஸ் பேசினார்.
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், மாற்றம் அமைப்பு மற்றும் தூய வளனார் கல்லூரி நாட்டு நளப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக கடமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அறிஞர் அண்ணா குடிமக்கள் உரிமைகள் சட்டப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான எஸ். அண்ணாதுரை, மாற்றம் அமைப்பின் நிறுவனரும், அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சமூக கடமை குறித்து விளக்கி பேசினர்.
இந்நிகழ்வில் தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். நிகழ்வின் தொடக்கத்தில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வை மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கலையாலயா ஆர்ட்ஸ் &கல்ச்சர் அகடமி நிறுவனர் முனைவர், பேராசிரியர் இரா.வை.மரகதம் வழக்கறிஞர். கார்த்திகா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தூய வளனார் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் அந்தோணிஜேசுராஜ், ராஜரத்தினம், ஆரோக்கியதனராஜ் வைய்யபெருமாள், ஆண்டனி ஆரோக்கியரஜ், ஏஞ்சல் பிரித்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் சத்திரம் பேருந்து நிலையம் மெயின் காட் கேட் பகுதியில் மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தூய வளனார் கல்லூரி நாட்டு திட்டத்தை சேர்ந்த மாணவர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu