100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி
X

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற காவலர் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (02.04.2024) தொடங்கி வைத்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா;வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும் குடிநீர்கேன்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ்கள் வழங்குதல், அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேடு வழங்குதல், இராட்சத பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்கள் கலந்து கொண்டு 100 சதவீரம் வாக்கு என்ற வடிவிலும் தேர்தல் இலட்சினை வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர;வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் 100 சதவீத வாக்குப்பதிவை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (02.04.2024) தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா;வு பதாகைகளை வாகனங்களில் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இப்பேரணியானது அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி காந்தி மாh;க்கெட் சென்று நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழியை; மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாருடன் அஞ்சல்துறை ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும், திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் உள்ள வணிக அஞ்சல் மையத்தில், ஒவ்வொரு தபாலிலும்; தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வாசகங்கள் இடம்பெறும் வகையில் பிரா ங்கிங்க் அச்சை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

மேலும், 100 சதவீதம் வாக்குபதிவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அஞ்சல் மண்டலத்தால் ஒரு முன்முயற்சியாக திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தின் அனைத்து தபால்காரர்களின் சீருடையில் 100 சதவீத வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வார்த்தைகளுடன் கூடிய பேட்ஜ் ஒட்டுவில்லைகளை தபால்காரர்களின் சீருடையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டி விழிப்புணா;வு ஏற்படுத்தினார்.

தபால்காரர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வருவதால், இந்த பேட்ஜ் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகமான மக்களுக்கு சென்றடைய வாய்ப்பாக அமையும்.

தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுவில்லைகளை தபால் துறை வாகனங்களில் ஒட்டியும், அதனைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து மாவட்டதேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார;, இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா;வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இப்பேரணியானது திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மகாத்மாகாந்தி அஸ்தி மண்டபம் சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்வுகளில், மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சிராப்பள்ளி கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர்கள் கலைவாணி, .பசுபதி, பிரதீப்குமார் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர; கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு