திருச்சியில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (09.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து மழைநீர் சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தினை பார்வையிட்டார்.
மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் தேக்குவீர் மழைநீர் பாதுகாப்பீர் குடிநீர் மழைநீரைச் சேமிப்போம் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம், வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி, வீட்டுக்கு ஒரு மழைநீர் கட்டமைப்பு நாட்டின் நிலத்தடி நீர்வளத்தின் பாதுகாப்பு, குளம் குட்டைகளை காப்போம் மழைநீர் கட்டமைப்புகளாக காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவ மாணவிகள் கையிலேந்தியடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார்200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்;சித்தலைவர் பிரதீப்குமார் இந்நிகழ்வில் தெரிவித்ததாவது:-
இந்த உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவது நீர்தான். தாவரங்கள் தனது உணவை உற்பத்தி செய்வதற்கும். விலங்குகளும், பறவைகளும் தாகம் தணிப்பதற்கும் நீர் இன்றியமையாததாய் விளங்குகின்றது. இத்தகை நீர் பூமிக்கு பலவகைகளில் கிடைத்தாலும் மழை மூலம் கிடைக்கப் பெறுகின்ற நீரே மனிதர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. ஆகவே இத்தகைய மழைநீரை நாம் அனைவருமே சேமித்து சிக்கனமாக நமது தேவைக்கு பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
அந்த வகையில் பொதுமக்கள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும். நீர்வளத்தை மேம்படுத்திட பெருகி வரும் மழைநீரை சேகரிக்க வேண்டும்.
நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவிட வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவிட வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டு கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் கொண்டுவரும் குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரி செய்திட வேண்டும்.
மேலும் வடிகட்டி தொட்டியில் உள்ள கூழாங்கற்கள் ஜல்லி கற்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும். சேமிப்பு தொட்டி சுத்தம் செய்யப்பட்டு நன்கு பராமரிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சரண்யா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எழிலரசன், நிர்வாகப் பொறியாளர்கள் நாகானந்த், வசந்தி, உமா உள்ளிட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ,மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu