திருச்சியில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
திருச்சியில் நடந்த  தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருச்சியில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 11.01.24 முதல் 17.01.24 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை வட்டார போக்குவரத்து துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

சாலை பாதுகாப்பு வார விழாவில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவருமான ஆர்.கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஜங்ஷன் பகுதி டி. வி. எஸ்.டோல்கேட் பொன்மலை கேந்திர வித்யாலாயா பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் இருசக்கர வாகனங்களில் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் விழிப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாத காரணத்தினால் செல்போனில் பேசி கொண்டு அதி வேகமாக வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு, தங்களது விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதை தவிர்க்கும் விதத்தில் வாகன ஓட்டிகள் தங்களது உயிரை காத்து கொள்வதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்காவும், சாலை விதிமுறைகளை தவறாது பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும், திருச்சி மாவட்டத்தில் விபத்துக்களை அறவே ஒழிக்க நாம் ஒன்றினைந்து முயற்சி மேற்கொண்டு சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும், சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது எப்படி போக்குவரத்து விதி மீறல் செய்தால் அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்ட தகவல்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழாவில் உறுதி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒயிட் ரோஸ் பொது நல அமைப்பின் தலைவர் சங்கர், பெட்காட் அமைப்பின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் , சமூக செயற்பாட்டாளர்கள் கோவிந்தசாமி, ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, பெட்காட் திருச்சி மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன், தாய் நேசம் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ், விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்சியாளருமான சுரேஷ் பாபு, இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான எழில் மணி, மகளிர் பிரிவு இணைச் செயலாளர் அல்லிக்கொடி, பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஆண்டோ ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!