/* */

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி எடமைலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய கெளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயம் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச். சுப்பிரமணியம் ஆலோசனைபடியும் உலக தண்ணீர் தினத்தில் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வீதிகளில் வீசபடுவதால் விவசாய நிலம் நீர்நிலைகள் நிலதடி நீர் உள்ளிட்ட வைகள் பாதிக்க படுவதை தடுக்கும் வகையில் மக்கும் வகையிலான பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு பழ வகையிலான கொய்யா மாதுளை மற்றும் புங்கை மரகன்றுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

நீரின்றி அமையாது உலகு என்பது வார்தைகள் மட்டும் அல்ல அது. இந்த பூமியில் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் அனைத்து உயிரினங்களும் உயர் வாழ மிகவும் தேவையான ஒன்று என்பதை உணர்த்தும் விதத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கு மட்டும் பயண்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நாம் வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி ஒரு மரகன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்கிற நோக்கில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொய்யா மாதுளை மற்றும் புங்கை வகையிலான மரகன்றுகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது உலக தண்ணீர் தினத்தில் இன்று நாம் பல தொழில் நுட்ப வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியால் இன்று பல நன்மைகள் இருந்தாலும் இவை வருவதர்க்காக இன்று பல்வேறு நாடுகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் இந்த வளர்ச்சி உருவாகியுள்ளது. அதிலும் பல நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு வளர்ச்சி என்கிற பெயரில் அந்த இடங்கள் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.


இந்நிலையில் இன்று சுற்றுச்சூழல் பதிக்கப்பட்டு நமது பூமி வெப்ப மயமாகி வருகிறது. இதனால் மனித இனம் மட்டும் இன்றி பறவைகள், விலங்குகள், கால்நடைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. இதனை நாம் அனைவரும் உணர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் வசதிக்கும் பகுதியில் ஏதாவது குளம், குட்டை அல்லது நீர் நிலைகள் இருந்தால் அதில் குப்பைகளை கொட்டாமல் அதை பாதுகாக்க வேண்டும் இயன்ற வரை நாம் வசிக்கும் பகுதியில் ஒரு மரகன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று இந்த உலக தண்ணீர் தினத்தில் நாம் உறுதியளித்து செயல்படுவோம் என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் பொதுமக்களுக்கு புங்கை கொய்யா மாதுளை உள்ளிட்ட மர கன்றுகள் வழங்கியும் வீடுகளிலும் நடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கௌரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை வழக்கறிஞர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு மரகன்றுகள் மற்றும் மக்கும் பைகளை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் மகளிர் பிரிவு இணை செயலாளர் அல்லி கொடி விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்சியாளருமான டி.சுரேஷ் பாபு விளையாட்டு பிரிவு இணை செயலாளரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான எழில் மணி சமூக செயற்பாட்டாளர்கள் ஆனந்தி சொளந்தரம் சிபு நிவரஞ்சனி சிலம்பம் மாஸ்டர் பார்த்திபன், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2023 4:25 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...